திமுக வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பிரதமர் மோடி ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு புரோக்கராக செயல்படுகிறார் என்று விமர்சித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தில் 6 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை வளையத்தில் இருந்து தற்போது வெளிவந்துள்ள அவர், திமுக நடத்தும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
சென்னை தாம்பரத்தில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி, ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் புரோக்கராக செயல்படுவதாகவும், பிரதமருக்கு பிள்ளை, மனைவி, குடும்பம் என யாரும் இல்லாததால் தான் இப்படி புரோக்கர் வேலை செய்ய வந்துவிட்டாரா எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமருக்கு எவ்வளவோ வேலை சுமை இருக்கும் எனவும் மத்திய அமைச்சராக நான் இருக்கும் போது எனக்கே எனது குடும்பத்துடனும், பிள்ளைகளுடன் கூட பேச நேரமிருந்ததில்லை எனவும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment