Business

நடிகை ஸ்ரேயாவிற்கும் டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவிற்கும் ரகசியமான முறையில் மும்பையில் திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில்  முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரேயா மும்பை அந்தேரியில் வசித்து வருகிறார்.

திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரேயா - ஆண்ட்ரே திருமணம் உதய்ப்பூரில் கோலாகலமாக நடக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் மும்பை அந்தேரியில் இருக்கும் ஸ்ரேயாவின் வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கடந்த 12 ஆம் தேதி ஸ்ரேயா - ஆண்ட்ரே திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திருமண நிகழ்ச்சியில் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், ஷபானா ஆஸ்மி ஆகியோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மும்பையில் நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்

No comments:

Post a Comment