மக்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதுதான் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த நிலையில், 3 கட்டங்களாக மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி கட்சி நிர்வாகிகளை நியமித்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஆன்மீக பயணமாக இமயமலைக்கு அவர் சென்றுள்ளார்.
அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழகத்தில் அடுத்தடுத்து, இரு பெண்கள் கொல்லப்பட்டிருப்பதை பற்றி கேள்விகளை கேட்டதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னியாகுமரியில் அறநிலைதுறைக்கு ஆதரவாக ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இமயமலையில் அமர்வது தான் ஆன்மீகமா என நடிகர் ரஜினிகாந்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மக்கள் பிரச்சனைக்கு குரல்கொடுக்காமல் ஒதுங்கிக்கொள்வது தான் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்றும் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
No comments:
Post a Comment