தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் சரித்திர படமான ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’ படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்.
சிரஞ்சீவியின் 151-வது படமான இப்படத்தை இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தை ‘கொனிடேலா' என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் துவங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் 16ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் திரைத்துறையினரின் போராட்டத்தால் தமிழ் சினிமா சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகள் சம்பந்தமான படப்பிடிப்புகளுக்கு 23ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமான நடிகர், நடிகைகள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அஜித்தின் விஸ்வாசம், கோலமாவு கோகிலா, ஆகிய படங்களில் ஒப்பந்தமான நடிகை நயன்தாரா தமிழில் நடிக்க முடியாத நிலையில், தெலுங்கில் உருவாகிவரும் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ஹா ரெட்டி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment