Business

இந்தி சினிமாவின் முன்னணி  நடிகைகளுள் ஒருவரான  கங்கனா ரணாவத், இந்திய பெண்களுக்கு பிரதமர் மோடிதான் ரோல் மாடல் என்று கூறியுள்ளார்

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசும் வழக்கம் கொண்டவர். சமீபத்தில் நியூஸ்18 தொலைக்காட்சி நடத்திய ரைசிங் இந்தியா மாநாட்டில்  பேசிய  கங்கனா ரணாவத், என் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண விரும்புகிறேன். இந்தியா வளராவிட்டால் நான் வளர முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். நான் ஒரு இந்திய பெண். இதை தவிர எனக்கு வேறு அடையாளம் இல்லை.

நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகை. பிரதமர் மோடி தான்  நம் நாட்டு பெண்களுக்கு ஏற்ற ரோல்மாடல் .  டீ விற்றவர் பிரதமர் ஆகி இருக்கிறார் என்றால், அது அவருடைய வெற்றி அல்ல. ஜனநாயகத்தின் வெற்றி. அவர் தான் சரியான ரோல் மாடல் என்று பேசினார்.

மேலும் கங்கனா ரணாவத் பேசுகையில், பாகிஸ்தான் கலைஞர்கள் இந்திய படங்களில் நடிக்க கூடாது என்று சொல்வது சரியல்ல. தேசிய கீதத்தை கேட்டால் அமெரிக்கர்கள் எழுந்து நிற்கிறார்கள். நாம் ஏன் நமது தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க வெட்கப்பட வேண்டும்?

நாட்டைப்பற்றி குறை சொல்வது ஒரு வழக்கமாகி விட்டது. நம் நாட்டில் உள் கட்டமைப்பு சரியில்லை. அசுத்தமாக இருக்கிறது என்று இளைஞர்கள் குறை சொல்கிறார்கள். அவர்களே ஏன் சுத்தம் செய்யக்கூடாது?”என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

மோடிக்கு ரசிகையான பிரபல இந்தி நடிகை

No comments:

Post a Comment