Business

ராயபுரம் தொகுதியில் உள்ள ஆதிதிராவிடர்களின் சுடுகாட்டினை இடிப்பதை கண்டிக்கும் வகையில் அப்பகுதி மக்களை சந்தித்த வைகோ மிஸ்டர் எடப்பாடி பழனிசமி தவறு செய்து கொண்டு வருகிறீர்கள் என்று  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் ராயபுரம் தொகுதியின் மூலகொத்தளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் சுடுகாட்டினை இடித்து அங்கு குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்டப்போவதாக வந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியை பார்வையிடுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றிருந்தார்.

அப்போது செய்தியாளர்களின் பேசிய அவர், ஆதிதிராவிடர் குடியிருப்பு என சொல்கிறார்கள். இதே இடத்தில் அமைச்சர்கள் இருப்பார்களா?  இவர்கள் மட்டும் இந்த இடத்தில் இருக்க வேண்டுமா? என்ற கேள்வியினை எழுப்பினார்.  மேலும், குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்ட திட்டமிட்டதாக கூறப்படும் இடம் வேறு. ஆனால், தற்பொழுது ஆதிதிராவிடர்களின் சுடுகாட்டினை அழிக்க நினைக்கின்றனர் என்றும் அவர் கூறினார். சுடுகாட்டுடன், மாணவர்கள் விளையாடும் விளையாட்டு திடலையும் ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள்.  ஆனால் மாணவர்கள் இந்த திடலில் விளையாடி பல வெற்றிகளை சாதித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய வைகோ, ஆக்கிரமிப்புகளை எதிர்த்து மக்கள் போராட கூடாது என்பதற்காக எச்-1 வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் அறிக்கை விடுத்துள்ளார். அதில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். நான் தான் போராடபோகிறேன் 10ஆயிரம் பேருடன் போராடுவேன் முடிந்தால் நடவடிக்கைகள் எடுக்கட்டும் என்று காவல்துறைக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும், இந்த பகுதியில் உள்ள சுடுகாட்டினை இடிக்க இயந்திரங்களை கொண்டு வந்தால், கொண்டு வருபவருக்கும், இயந்திரத்திற்கும் தான் ஆபத்து என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய வைகோ, சுடுகாட்டினை கை வைத்தால் தமிழக அரசே  சுடுகாட்டிற்கு செல்லும் என்றும், எக்காரத்தினை கொண்டும் இத்திட்டதினை கொண்டுவரக்கூடாது என்றும்  அவர் கூறினார். மேலும், திராவிட இயக்கத்திற்கு கேடாக எடப்பாடி பழனிச்சாமி விளங்குகிறார் என்றும் வைகோ விமர்சித்திருக்கிறார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டம் 1996ல் குறிப்பிட்டுள்ள விதி படி, சர்ச் கமிட்டி இறுதி செய்து கொடுக்கும் மூன்று பேரில் ஒருவரைத்தான் ஆளுநர்,  நியமிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனாலும் ஆளுநருக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால், அவர் புதிதாக ஒரு சர்ச் கமிட்டியை நியமிக்கலாம்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான .சூரிய நாராயண சாஸ்திரியை அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருப்பது ஆளுநரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.ஆகவே,இந்த நியமனத்தை   திரும்பப் பெறவேண்டும் என்றும் தமிழகத்திலிருந்து துணைவேந்தர் பதவிக்கு தகுதியான பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களை தேர்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.

மிஸ்டர் எடப்பாடி பழனிசாமி தவறு செய்துகொண்டே வருகிறீர்கள் – வைகோ எச்சரிக்கை

No comments:

Post a Comment